Photos

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்களை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக (TNeGA) நியமிக்கப்பட்டுள்ள திரு.டேவிதார், IAS (ஓய்வு) அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் அரங்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு பாசனத்திட்டங்கள், மாநில சட்டமன்றம், அமைச்சரவை துறை அமைச்சர் திரு. துரைமுருகன் மற்றும் மாண்புமிகு மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ் இணைய கல்வி கழகத்தின் (Tamil Virtual Academy) செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் அரங்கத்தில் துவக்கி வைத்தார். இணையத்தின் பயன்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சர் பேசினார்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில், சென்னையில் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை இயக்குனர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில் நுட்ப துறையில் தமிழகத்தை இந்தியாவின் தலை நகரமாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் Dr.நீரஜ் மிட்டல் IAS அவர்களும் கலந்து கொண்டார்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழிணைய ஒருங்குறியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது மற்றும் தமிழிணைய ஒருங்குறி மாற்றியை பயன்படுத்துவது குறித்த செயல் முறை விளக்கப் பயிற்சியினை இணையவழியில் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சார்பில் உள்ள பொது சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் Dr. நீரஜ் மிட்டல் IAS மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு. அஜய் யாதவ் IAS ஆகியோர் உடன் உள்ளனர்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் சேலம் மேற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பொது இ - சேவை மையத்தையும், ஆதார் சேர்க்கை மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் Dr. நீரஜ் மிட்டல் IAS உடன் உள்ளார்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் விளங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை ஆய்வு செய்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் Dr. நீரஜ் மிட்டல் IAS உடன் உள்ளார்.